கடலில் மூழ்கி மாணவன் மரணம்! கல்முனையில் சம்பவம்!

கடலில் மூழ்கி மாணவன் மரணம்! கல்முனையில் சம்பவம்!


நண்பர்களுடன் கடலில் குளிக்கச்சென்ற கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரி மாணவனான நேசமணி அக்ஸயன் (வயது 17) இன்று (08) மாலை கல்முனைக்கடலில் மூழ்கி இறந்துள்ளார். 


உயர்தரம் தொழிநுட்ப பிரிவில் கல்வி பயிலும் இவர் நண்பர்களுடன் கூட்டாக இணைந்து கடலில் குளித்து கொண்டிருந்த போதே சம்பவம் நடைபெற்றுள்ளது. 


மரணித்தவரின் உடல் மீட்கப்பட்டு கல்முனை மாநகர சபை உறுப்பினர் ச. ராஜன் மூலமாக  கல்முனை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளது. 


இது குறித்த மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். நாடு பயணக்கட்டுப்பாட்டில் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையிலையே இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.


-நூருள் ஹுதா உமர்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.