
கல்முனை பாண்டிருப்பு கடற்கரையில் உயிரிழந்த நிலையில் 5 நீளமான சிவப்பு நிற டொல்பின் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பில் மீனவர்களால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து கடற்றொழில் திணைக்கள உத்தியோகர்கள் பொதுச் சுகாதார பரிசோதகர் பொலிஸார் சென்று பார்வையிட்டனர்.
இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டொல்பின் உள்ளிட்ட கடலாமைகளை பகுப்பாய்விற்காக வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் கொண்டு சென்றுள்ளனர்.
ஏற்கனவே அம்பாறை மாவட்டம் கல்முனை பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பெரியநீலாவணை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் எரி காயங்களுடன் இறந்த நிலையில் கடலாமைகள் டொல்பின் மீனினம் என பல வகை கடல்வாழ் உயிரினங்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கரை ஒதுங்கி இருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
கொழும்பு கடற்பரப்பில் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் மூழ்கிய பின்னர் அம்பாறை மாவட்ட கடற்கரையோரங்களில் தொடர்ச்சியாக கடல்வாழ் உயிரினங்கள் கடற்கரை பகுதியில் எரிகாயங்களுடன் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
-பாறுக் ஷிஹான்