தனியார் வங்கிகள் தொடர்பில் வெளியான விசேட செய்தி!!!

தனியார் வங்கிகள் தொடர்பில் வெளியான விசேட செய்தி!!!

இலங்கையில் இயங்கும் பிரதான தனியார் வங்கிகள் தமது கிளைகளை இன்று முதல் மூடவுள்ளதாக அறிவித்துள்ளன.

அதிகரித்துச் செல்லும் கொரோனா தொற்றை அடுத்து நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதற்கு இணங்கும் வகையில் தமது கிளைகளைகளையும் மூடுவதாக குறித்த வங்கிகள் அறிவித்துள்ளன.

வாடிக்கையாளர்களின் வருகை குறைவு மற்றும் பணியாளர்களுக்கு உரிய நேரத்திற்கு சமூகமளிக்க முடியாமை ஆகிய விடயங்களை கருத்திற் கொண்டு, வங்கிகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வங்கிகள் அறிவித்துள்ளன. தன்னியக்க இயந்திரங்கள், இலத்திரனியல் வங்கி சேவைகளை பயன்படுத்தி, வங்கி சேவைகளை நாளை முதல் முன்னெடுக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அரச வங்கிகள் மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.