மொட்டு அரசாங்கம் ஒரு தேசிய அவமானம்! எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் சஜித் ஆவேசம்!

மொட்டு அரசாங்கம் ஒரு தேசிய அவமானம்! எரிபொருள் விலையேற்றம் தொடர்பில் சஜித் ஆவேசம்!


பொதுஜன பெரமுன அரசாங்கம் ஒரு தேசிய அவமானமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக சாடியுள்ளதோடு, உங்களால் முடியவில்லை என்றால் முடியாது எனக் கூறுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


எரிபொருட்களின் விலை நேற்று (11) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்டுள்ளமையின் காரணமாகவே அவர் இவ்வாறு அரசாங்கத்தை விமர்சித்துள்ளார்.


இது குறித்து டுவிட்டர் பதிவொன்றை செய்துள்ள எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, 


'பொஹொட்டுவ அரசாங்கமே வெட்கமாக இருக்கிறது. நீங்கள் ஒரு தேசிய அவமானம். உங்களால் நிர்வகிக்க முடியாவிட்டால் முடியாது என்று கூறுங்கள். ஐக்கிய மக்கள் சக்தி செழிப்பான மற்றும் அபிவிருத்தியின் சகாப்தத்தை உருவாக்கும்.’ என்று குறிப்பிட்டுள்ளார்.


-எம்.மனோசித்ராPrevious News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.