பள்ளிவாசலில் ஒன்றுகூடிய விவகாரம்! பள்ளிவாசலில் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும் இடை நிறுத்தியது வக்பு சபை!

பள்ளிவாசலில் ஒன்றுகூடிய விவகாரம்! பள்ளிவாசலில் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும் இடை நிறுத்தியது வக்பு சபை!


யாழ். கலீபா அப்துல் காதர் வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ பள்ளிவாசலில் தலைவர் உட்பட அனைத்து நிர்வாகிகளையும், பொறுப்பதாரிகளையும் உடன் அமுலுக்குவரும் வகையில் இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் விசேட நிர்வாக குழுவொன்றை நியமனம் செய்வதற்கும் இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த பள்ளவாசலில் கடந்த 04ஆம் திகதி நடமாட்ட கட்டுப்பாடுகளை மீறி தலைவர் உட்பட 14 பேர் ஒன்று கூடி இருந்தமையால் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் தரப்பினரால் தனிமைப்படுத்தப்பட்டனர்.


பள்ளிவாசலின் தலைவர் உட்பட நிர்வாகிகள் தொடர்ந்தும் அரசாங்கத்தின் சட்டங்களை மீறி நடந்துள்ளமையால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.