கொழும்பில் பல்லாயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் திருட்டு - மக்களுக்கு அசௌகரிய நிலை!!!

கொழும்பில் பல்லாயிரக்கணக்கான கொரோனா தடுப்பூசிகள் திருட்டு - மக்களுக்கு அசௌகரிய நிலை!!!

கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 11 மருத்துவ அதிகாரி பிரிவுகளுக்கு வழங்கப்பட்ட சுமார் 70,000 கொரோனா தடுப்பூசிகள் காணாமற் சென்றுள்ளதாக தெரிய வந்துள்ளது.

தடுப்பூசியின் முதல் டோஸ் குறித்த அனைத்து விசாரணை அறிக்கையையும் சமர்ப்பிக்குமாறு சுகாதார பணிப்பாளர் அசேல குணவர்தனவுக்கு, ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

தற்போது நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் மற்றும் தற்போது போடப்படும் தடுப்பூசிகள் குறித்த தரவுகளை கணனிமயமாக்குமாறு இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

தரவுகளின் கணனிமயமாக்கலின் போது இந்த தடுப்பூசிகள் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை என்பது தெரியவந்தது.

கொழும்பு மாவட்டத்தில் 400,000 கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த தடுப்பூசிகளை உடனடியாக மக்களுக்கு வழங்க வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி தொடர்பான தகவல்களை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் முறையாக வழங்கவில்லை என கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.