“கொலையாளி வெளியே” - துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து மறைந்த பாரத லக்‌ஷ்மனின் மனைவி!

“கொலையாளி வெளியே” - துமிந்த சில்வாவின் விடுதலை குறித்து மறைந்த பாரத லக்‌ஷ்மனின் மனைவி!

கொலை குற்றவாளியும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான துமிந்த சில்வாவ ஜனாதிபதி பொது மன்னிப்பின் பிரகாரம் விடுவித்தமைக்காக அரசாங்கத்தின் முடிவை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமன வன்மையாக கண்டித்துள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக 2016 இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சில்வா, இன்ற ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.

இது தொடர்ப சுமன பிரேமச்சந்திரா தெரிவிக்கையில், “கொலையாளி வெளியே. நீதியை மதிக்காத நாட்டின் மீது சூரியன் ஒரு போதும் பிரகாசிக்காது ”

மூன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் ஐந்து உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்புகளை புறக்கணிப்பதன் மூலம், நீதித்துறையை மதிக்காத நாடாக இலங்கை மாறியுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இன்று இலங்கையில் அனுசரிக்கப்படும் சிறப்பு பௌத்த பண்டிகையான பொசொன் போயாவின் புனித நாளில் இந்த அநீதி ஏற்பட்டுள்ளது என்றும் சுமன பிரேமச்சந்திர சுட்டிக்காட்டினார். (யாழ் நியூஸ்)


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.