சிறையை உடைத்து தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் - தீவிர தேடுதல் பணியில் பொலிஸார்!!!

சிறையை உடைத்து தப்பிச் சென்ற சிறைக்கைதிகள் - தீவிர தேடுதல் பணியில் பொலிஸார்!!!

குருநாகல் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகள் நால்வர் சிறையை உடைத்து தப்பிச் சென்றுள்ளனதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அவர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் விற்பனை சம்பந்தமான குற்றச்சாட்டுகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்கள், நீதிமன்ற அமர்வொன்றுக்கு அழைத்துச் செல்லப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்தபோதே தப்பிச் சென்றுள்ளனர்.

20,26 மற்றும் 27 வயதுகளையுடைய இந்த சந்தேகநபர்கள் குருநாகல் வெல்லவ, துருளியகம ,மாவத்தகம ,தெல்கொல்ல பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.

ஏனைய சந்தேகநபர்களை பொலிஸார் தேடிவருகின்றனர்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.