கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! ஐக்கிய மக்கள் சக்தி முடிவு!

கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! ஐக்கிய மக்கள் சக்தி முடிவு!


எரிபொருள் விலை அதிகரிப்பை அடுத்து எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்த பின்னர் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்சித் தலைவர் கூட்டம் இடம்பெற்றது.

இதன்போதே அடுத்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டுவர தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் கூட்டத்தொடர் எதிர்வரும் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.