இந்திய மருத்துவமனை கழிவுகள் இலங்கை கடலில்! - எழுந்த்துள்ள மேலும் ஒரு சர்ச்சை!

இந்திய மருத்துவமனை கழிவுகள் இலங்கை கடலில்! - எழுந்த்துள்ள மேலும் ஒரு சர்ச்சை!

யாழ்ப்பாணம், நாகதீப தீவின் தெற்கு கடற்கரையில் ஏராளமான மருத்துவமனைக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக அப்பகுதி மீனவர்களும், பிரதேசவாசிகளும் தெரிவிக்கின்றனர். 

மருத்துவமனைகளில் இருந்து அப்புறப்படுத்தும் சிரிஞ்ச்கள், உமிழ்நீர் பாட்டில்கள், இரத்தமாற்றம் மற்றும் மருந்துக் கொள்கலன்கள் உள்ளிட்ட ஏராளமான குப்பைகள் காணப்படக்கூடியதாக தெரிவிக்கின்றனர். 

இக்கழிவுகள் யாழ்ப்பாண மாவட்ட மருத்துவமனைகளிலிருந்து கொட்டப்பட்டவை அல்ல என்றும், இந்தியாவில் உள்ள மருத்துவமனைகளில் இருந்து வெளியேறும் கழிவுகள் என பிரதேசவாசிகள் சந்தேகிக்கின்றனர்.

மேகும், இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாண மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு தெரிவிக்க அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.