தாம் நினைத்தவாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாது! -சன்ன ஜயசுமன

தாம் நினைத்தவாறு தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியாது! -சன்ன ஜயசுமன


இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்திற்கு மாத்திரமே இலங்கையில் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ளும் ஆற்றல் உண்டு. தனியார் நிறுவனங்களுக்கு தாம் நினைத்தவாறு இதனை பெற்றுக்ககொள்ள முடியாது என்று இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.


எந்தவொரு நாடும் இவ்வாறான தடுப்பூசி அல்லது மருந்துவகைகளை விநியோகிப்பது அந்தந்த நாடுகளிலுள்ள அரச நிறுவனங்களுக்கு மாத்திரமே ஆகும் என்றும் இராஜாங்க அமைச்சர் கூறினார்.


சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றிக் கொண்டவர்களுக்கு அதன் இரண்டாவது டோஸ் ஏற்றும் நடவடிக்கை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகும் என்றும் பேராசிரியர் சன்ன ஜயசுமான கூறினார்.


அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (02) நடைபெற்ற தடுப்பூசி ஏற்றும் பணியில் இன்றும் நாளையும் என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் பங்கேற்ற போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


2020 அண்டின் நாட்டின் மொத்த சனத்தொகையில் 20 வயதிற்கு மேற்பட்டோர் 145 லட்சம் பேர் இருக்கின்றனர். இவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு தடுப்பூசிகளை ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


தடுப்பூசி ஏற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகள் கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து மேற்கொண்டிருந்ததாக குறிப்பிட்ட அவர், ஐந்து லட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் கடந்த வருடம் ஜனவரி மாதம் நாட்டிற்குக் கிடைத்தது. தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் ஜனவரி மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமானதாக கூறினார்.


13 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு உடன்படிக்கை செய்யப்பட்டிருக்கிறது. அவற்றில் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிடைக்கவுள்ளன. மேலும் ஐந்து மில்லியன் தடுப்பூசிகள் எதிர்வரும் புதன்கிழமை கிடைக்கும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.