முதலாம் தரத்துக்கு சேர்க்கப்படும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு! சவாலுக்கு உள்ளாகியுள்ள கல்வி அமைச்சின் தீர்மானம்!

முதலாம் தரத்துக்கு சேர்க்கப்படும் மாணவர் எண்ணிக்கை அதிகரிப்பு! சவாலுக்கு உள்ளாகியுள்ள கல்வி அமைச்சின் தீர்மானம்!


எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு சேர்த்துக் கொள்ளப்படும் மாணவர்களுக்கு விண்ணப்பப் படிவங்கள் கோரப்பட்டுள்ள நிலையில், அதன் ஊடாக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வி அமைச்சினை குற்றம் சுமத்தியுள்ளது.


வகுப்பொன்றில் காணப்படும் அதிகபட்ச மாணவர்களின் எண்ணிக்கை 35 ஆக இருக்க வேண்டும் என்று வழங்கப்பட்ட தீர்ப்பினை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் 40 மாணவர்களை இணைத்துக் கொள்ள கல்வியமைச்சு தீர்மானித்துள்ளதாக சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


எனினும், தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டே இவ்வாறான தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.


இது தொடர்பில் உரிய சட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளதாக கல்வியமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.


இதேவேளை, அடுத்த ஆண்டுக்கான முதலாம் தரத்துக்கு  மாணவர்களுக்கு சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்தவாரம் கோரப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.