
தீப்பற்றியுள்ள கப்பலுக்கு அண்மையில் பயணித்த வர்த்தக கப்பல் ஒன்று நேற்று, அதற்கு அருகில் அனுப்பப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார்.
கடந்த நான்கு தினங்களுக்கு முன்னர் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சிங்கப்பூர் நோக்கி பயணித்த இந்த கப்பல், சர்வதேச கடல் எல்லையில் தீப்பற்றியுள்ளதாக கடற்படையினர் தெரிவிக்கின்றனர்.
எனினும், அது இலங்கையின் மீட்பு வலயத்துடன் தொடர்புடையது என்பதனால், தற்போதைய கடல் வலயம் குறித்து, அனைத்து துறைகளுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் குறிப்பிட்டார்