ஊடகவியலாளர் சமுதித்த மீது இரண்டு புகார்கள் பதிவு!

ஊடகவியலாளர் சமுதித்த மீது இரண்டு புகார்கள் பதிவு!


நீதிமன்ற தீர்ப்பினை அவமதித்தமை மற்றும் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பாக ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரம மீது புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.


சந்திமால் ஜயசிங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் மஞ்சு ஸ்ரீ சந்திரசேன தெரிவிக்கும் போது, 'சந்திமால் ஜயசிங்கவுக்கும் அவரது பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும் பிணை வழங்க நீதிமன்றம் எடுத்த முடிவை விமர்சித்து நீதித்துறையை அவமதித்ததற்காக சமுதித்த சமரவிக்ரம மீது புகார் அளித்துள்ளார்' என தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில், 'நாங்கள் பொலிஸ் நிலையம் மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தில் புகார் அளித்தோம். நீதிமன்ற அமர்வுகள் மீண்டும் தொடங்கியதும் நாங்கள் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம்', என வழக்கறிஞர் கூறினார்.


இதற்கு மேலதிகமாக, முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளி பேணாமல் யூடியூப் நேர்காணலில் தோன்றியதன் மூலம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியதாக சமுதித்த சமரவிக்ரம மீது சந்திமால் ஜயசிங்க மேலுமொரு புகார் அளித்துள்ளார். (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.