ரதன மற்றும் ஞானசார தேரர்களுக்கு இடையே மீண்டும் மோதல்?

ரதன மற்றும் ஞானசார தேரர்களுக்கு இடையே மீண்டும் மோதல்?


நாடாளுமன்ற  உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் மற்றும் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செலயாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கும் இடையே மீண்டும் மோதல் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


கடந்த பொதுத் தேர்தலில் ஒரேயொரு தேசியப் பட்டியல் ஆசனத்தை எங்கள் மக்கள் சக்தி வென்றது.


எனினும் அந்தக் கட்சி சார்பாக போட்டியிட்ட ரதன தேரர் மற்றும் ஞானசார தேரருக்கு இடையே பாரிய சர்ச்சை ஏற்பட்ட நிலையில் இறுதியாக 03 மாதங்களுக்கு ரத்தன தேரருக்கு ஆசனத்தை விட்டுக்கொடுத்த ஞானசார தேரர் இணங்கியிருந்தார்.


இதற்கமைய கடந்த ஜனவரி மாதத்தில் ரதன தேரர் எம்.பியாக நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்தார்.


ரத்தன தேரருக்காக 06 மாதங்கள் என்றாலும் ஆசனத்தை வழங்கத் தயார் என்று ஞானசார தேரர் தெரிவித்த பிரகாரம், அதன் கால எல்லை ஜுலை மாதம் 05ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.


இந்நிலையில் எம்.பி பதவியை ரதன தேரர் வாக்களித்தபடி தனக்கு வழங்காவிட்டால் கட்சி சார்பாக எம்.பி இவர்தான் என்பதை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்ப ஞானசார தேரர் தீர்மானித்திருப்பதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.