பயணக் கட்டுப்பாடு தொடர்வதா இல்லையா? வெளியான புதிய தகவல்!

பயணக் கட்டுப்பாடு தொடர்வதா இல்லையா? வெளியான புதிய தகவல்!


நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இன்று (14) கருத்து வெளியிட்டார்.


அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா தொற்று பற்றிய அறிக்கைகளை வைத்தே பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பதா அல்லது நிர்ணயிக்கப்பட்ட வரும் 21ஆம் திகதி தளர்த்துவதா என்ற தீர்மானம் எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.


எவ்வாறாயினும் கடந்த மே மாதம் 21ஆம் திகதி பயணக்கட்டுப்பாடு அமுல்படுத்தத் தொடங்கிய நிலையில் இன்றுவரை 2300 முதல் 2800 வரையான தொற்றாளர்கள் தினமும் அடையாளம் காணப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.