பசில் ராஜபக்சவினது பாராளுமன்ற நுழைவுக்காக பாராளுமன்ற உறுப்புரிமையை தியாகம் செய்ய தயாராகும் நான்கு எம்பிக்கள் - விபரம் வெளியானது!

பசில் ராஜபக்சவினது பாராளுமன்ற நுழைவுக்காக பாராளுமன்ற உறுப்புரிமையை தியாகம் செய்ய தயாராகும் நான்கு எம்பிக்கள் - விபரம் வெளியானது!

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் (மொட்டு சின்னம்) தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, பாராளுமன்றம் பிரவேசிப்பதற்காக தங்களது ஆசனங்களை வழங்க அக்கட்சியின் 4 தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராகவிருப்பதாக கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, மர்ஜான் பலீல் மற்றும் பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே தமது பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவியை விட்டுக்கொடுக்க தயாராகவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் 06ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற அமர்வு வாரத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச  பாராளுமன்ற உறுப்பினராக சத்திய பிரமாணம் செய்து கொள்ளக்கூடும் என ஆளும் கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.