🚨 நாடு திரும்பியதும் பசில் கைது???????

🚨 நாடு திரும்பியதும் பசில் கைது???????


நாட்டுக்கு உக்ரைன் பிரஜைகளை அழைத்து வந்ததன் மூலம் கொரோனா தொற்று பரப்பப்பட்டதாகவும் அதனால் ஏற்படும் உயிர் பலிகளுக்கு பசில் ராஜபக்ஷ பொறுப்பு கூற வேண்டும் எனவும் தெரிவித்து உலப்பனே தேரர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவியுள்ள 195 நாடுகளில் கொரோனா குறித்து பதிவு செய்யப்பட்ட முதலாவது வழக்காக பசில் ராஜபக்ஷ மீதான வழக்கு காணப்படுகிறது.

தேரரின் இந்த வழக்கால் அமெரிக்கா சென்றுள்ள பசில் நாடு திரும்பியதும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு தென்னிலங்கையில் எழுந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்த உலப்பனே சுமங்கல தேரரின் செயற்பாடு கீழ்த்தரமானது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கண்டனம் வௌியிட்டுள்ளனர்.

கொரோனா மரணங்களில் அரசியல் செய்யும் நாடாக இலங்கை முழு உலகிற்கும் காண்பிக்கப்பட்டுள்ளதாகவும் அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கில் உலப்பனே தேரர் முன்னெடுத்துள்ள இந்த செயற்பாடு வெறுக்கத்தக்கது எனவும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.