AUMSA வின் பயணச் சுவடுகள்! -ஜாஸிரா ஜுனைதீன் (கொழும்பு பல்கலைக்கழகம்)

AUMSA வின் பயணச் சுவடுகள்! -ஜாஸிரா ஜுனைதீன் (கொழும்பு பல்கலைக்கழகம்)


"அவன் தான் நாடியவரக்களுக்கு உதவி புரிகின்றான். அவன் யாவற்றையும் மிகைத்தவன். பெருங்கிருபையுடையவன்." 

அல்குர்ஆன் 30:05


அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வின் பேரருளால் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் ஊடாக கடந்த கொவிட் விடுமுறை காலத்தில் எம்மால் முடியுமான அளவு பிரயோசனமான நிகழ்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. மேலும் அவையாவும் சரியான முறையில் உரியவர்களை சென்றடைந்தன என்பதிலும் நாம் பெறும் மகிழ்ச்சி கொள்கின்றோம். அத்துடன் கடந்த வருடத்தில் பல்வேறுபட்ட நிகழ்வுகள் AUMSA வினால் நடாத்தப்பட்டது என்பதிலும் நாம் பெறும் மகிழ்ச்சி கொள்கின்றோம். 


பல்கலைக்கழக மாணவர்களுக்கான போட்டிகள், ஆண்கள்-பெண்களுக்கென தனித்தனியே அல்குர்ஆன் மனனப் போட்டி, மேலும் ஆண்கள் - பெண்களுக்கென வழிக்காட்டல் கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், பல ஊக்குவிப்பு செயற்திட்டங்கள், மேலும் பாடசாலை மாணவர்களுக்கான கல்விசார் நடவடிக்கைகள் உள்ளடங்கிய நிகழ்வுகள் என பல செயற்பாடுகள் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டன. 


"கற்பவனாக இரு, கற்பிப்பவனாக இரு, கற்பவனுக்கு உதவி செய்பவனாக இரு, நான்காமவனாக இருந்துவிடாதே!" என கண்மணி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அந்த வகையில் அல்லாஹ்வின் கிருபையினால் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமும் தன்னால் முடியுமான அளவு மாணவர்களுக்கு உரிய கல்வியை வழங்க உரிய முயற்சியை எடுத்ததோடு அதில் வெற்றியும் பெற்றுள்ளது.  


அதில் முக்கியமாக E-Study எனப்படும் இணையவழி கற்றல் முறைமை செயற்பாடு AUMSA வினால் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது. அதாவது கற்றல் என்பது ஒரு தொடர்ச்சியான செயற்பாடாகும். ஆனால் கொவிட் 19 காரணமாக தவிர்க்க முடியாமல் பாடசாலைகள் விடுமுறை விடப்பட்டதால் மாணவர்களது கல்வி நடவடிக்கைகள் தடைப்படாமல் இருக்க  AUMSA தன்னால் இயலுமான அளவு மாணவர்களுக்கு உதவி செய்யும் நோக்கில் இந்த இணையவழி கற்றல் செயற்பாட்டினை அறிமுகம் செய்து வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றது. 


AUMSA வினால் மேற்கொள்ளப்பட்ட இந்த இணையவழி கற்றல் செயற்பாடானது 2020ஆம் ஆண்டு கா.பொ.த உயர்தர பரீட்சைக்குத் தோற்றிய  மாணவர்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டது. இவ் இணையவழி கற்கை முறைமை பல படிமுறைகளைக் கொண்டதாக முன்னெடுக்கப்பட்டு முறையான வடிவமைப்புடனும் பல உள்ளடக்கங்களைக் கொண்டதாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டது. 

     

அதற்கமைவாக முதலாவது நடவடிக்கையாக இணையவழி (Google) விண்ணபப்படிவம் ஒன்று தயார் செய்யப்பட்டு அது பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பகிரப்பட்டது. அந்த விண்ணப்பப்  படிவத்தினை பூர்த்தி செய்த மாணவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் உரிய பாடங்களுக்கு உரிய வளவாளர்கள் தெரிவு செய்யப்பட்டதோடு அவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த குழுமம் ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் விரிவுரைகளை நடத்த வேண்டிய முறைகள், கடந்த கால வினாப்பத்திரங்கள் செய்தல் மேலும்  இன்னும் பல வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன. மேலும் பாட ரீதியான விரிவுரைகள் ஆகியன அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது. 


YouTube செயலியில் உரிய பாடத்தின் விளக்கம் அதாவது விரிவுரைகள் அத்தோடு கடந்த கால மற்றும் மாதிரி வினாத்தாள்கள், விடைகள் மற்றும் செயன்முறைகளுடன் சரியாக விளக்கப்பட்டு காணொளிகளாகப் பதிவேற்றம் செய்யப்பட்டன. மிக முக்கியமாக இந்த இணையவழி கற்பித்தல் செயன்முறையானது மும்மொழிகளிலும் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தச் செயன்முறை வெற்றிகரகமாக மேற்கொள்ளப்பட்டது என்பதோடு உரிய வகையில் மாணவர்களைச் சென்றடைந்தது என்பதற்கு ஆதாரமாக நாம் பல சிறந்த பின்னூட்டல்களையும், வாழ்த்துக்களையும் விளக்கப்பகுதியில் (Comments) பெற்றுக்கொண்டோம். 


மேலும் நாம் பதிவேற்றம் செய்த சில காணொளிகள் 2000 இற்கும் மேற்பட்ட பார்வயாளர்களைப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த இணைவழிக்கற்றல் செயன்முறையானது AUMSA வின் நிர்வாக அங்கத்தவர்களுள் ஒருவரான களனிப் பல்கலைக்கழக மாணவரும் AUMSAவின் முன்னால் துணைச் செயலாளருமான ஹனான் என்பவரின் தலைமை பொறுப்பில் வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.  இந்த செயற்பாடு இவ்வளவு தூரம் வெற்றியடைவதற்கு இவர் பெரிதும் உறுதுணையாக நின்றதோடு தனது தலைமையில் சிறப்பாக நடத்திச் சென்றார் என்பதும் குறிப்பிடதக்கது. சிறப்பான கற்றலுக்கு பிரதிபலிப்புடன் கூடிய கவனம் இன்றியமையாதது ஆகும். அந்த வகையில் கற்றலை ஒரு தேடலாகவும் சுவாரசியமாகவும், ஊக்குவிப்பு செயலாகவும் திட்டமிட்டு எம்மால் முடியுமான அளவு வல்ல இறைவனின் துணையுடன் இந்நிகழ்வுகளை சிறப்பாக நடாத்தி மாணவர்களை பயன்பெறச் செய்தோம் என்பதில் AUMSAவின் அங்கத்தவர்கள் என்ற வகையில் பெறும் மகிழ்ச்சியடைகிறோம். 


மேலும் E-Study போன்ற இன்னும் பல நிகழ்வுகள் AUMSAவினால் மேற்கொள்ளப்பட்டது. அவற்றுள் Webinar Series எனப்படும் "இணையவழி செயலமர்வு தொடர்" என்பதும் முக்கியமானதாகும். இந்த இணையவழி மூலம் மேற்கொள்ளப்பட்ட கருத்தரங்கு அல்லது செயலமர்வு தொடரானது பல உலமாக்களையும் கல்விமான்களையும் கொண்டு மிகச் சிறப்பாக வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட செயலமர்வுகள் பல்வேறு துறைசார்ந்த வல்லுணர்களைக் கொண்டு ஆண்கள் பெணக்ளுக்கென தனித்தனியாகவும் பல்வேறு உள்ளடக்கங்களையும், விடயங்களையும் உள்ளடக்கியதாகவும் அமையப்பெற்றிருந்தன.அதாவது ஆன்மீக வழிக்காட்டல் நிகழ்வுகள், வெவ்வேறு துறைசார் வழிக்காட்டல் நிகழ்வுகள், ஊக்குவிப்பு மற்றும் விழிப்புணர்வு செயலமர்வுகள் ஆகிய பல முக்கிய நிகழ்வுகளை கொண்டதாக இந்த இணையவழி செயலமர்வுத் தொடர்கள் அமையப் பெற்றிருந்தன.


இந்த இணையவழி கருத்தரங்குத் தொடரானது பல படிமுறைகளைக் கொண்டனவாக மேற்கொள்ளப்பட்டது. அவற்றுள் முதலாவதாக ஒவ்வொரு பிரதேசத்தவருக்கும், ஒவ்வொரு துறைசார்ந்தவர்களுக்குமென வெவ்வேறு பிரிவாக வெவ்வேறு அமர்வுகளைக் கொண்டதாக கருத்தரங்கு தொடர்கள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்பட்டன. அடுத்ததாக ஒவ்வொரு கருத்தரங்குக்ளுக்குமென தனித்தனியே ஒரு ஒருங்கிணைப்பாளரை நியமித்து அவர் மூலம் உரிய முறையில் கருத்தரங்குகள் பல உள்ளடக்கங்களையும் அமர்வுகளையும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டன. அந்தவகையில் ஒவ்வொரு கருத்தரங்குகளும் பல நிகழ்ச்சி நிரல்களைக் கொண்டனவாக குறிப்பிட்ட ஒருங்கிணைப்பாளரின் தலைமையில் வடிவமைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடதக்கது.  


மேலும் கருத்தரங்குத் தொடர்களை நடாத்துவதற்கு வெவ்வேறு துறைசார்ந்த வளவாளர்களை பல்வேறு பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்து அவர்கள் மூலம் நிகழ்வுகள் செழிப்புரச் செய்யப்பட்டன. இவ்வாறாக பல்வேறு படிமுறைகளை கொண்டதாக நிகழ்வுகள் ஒழுங்குப்படுத்தப்பட்டு பல தலைப்புக்களையும் அமர்வுகளையும் கொண்டனவாக வெற்றிகரமான முறையில் நடாத்தப்பட்டது. மேலும் வெவ்வேறு வயது பிரிவினருக்கும் அதாவது பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் எனவும் அதிலும் ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு வேறு எனவும் இந்த இணையவழி கருத்தரங்குத் தொடர்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. 


ஒவ்வொரு அமர்விலும் அதிகளவிலான நபர்கள் பங்குப்பற்றியதோடு மிகச் சிறந்ததும் ஊக்கமளிக்கக்கூடியதுமான பின்னூட்டல்கள் பலவற்றை பெற்றுக் கொண்டோம் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பின்னூட்டல்களில் கேட்டுக் கொண்ட வேண்டு கோள்களையும் இனங்கண்டு அடுத்த அடுத்த அமர்வுகளில் அதற்குரிய நிகழ்வுகளையும் உரிய விளக்கங்களையும் வழங்கிப் பெறும்  வரவேற்பையும் பெற்றுக்கொண்டோம்.


இந்த இணையவழி மூலம் நடைப்பெற்ற கருத்தரங்குத் தொடர்களுக்கு பொறுப்பாக தலைமை தாங்கிச் செயற்பட்டவர், AUMSAவின் நிர்வாக அங்கத்தவர்களுள் ஒருவரும், AUMSA வின் மேல் மாகாண ஊடக ஒருங்கிணைப்பாளருமான, M.M.M.முஸ்தாக் ஆவார்.  இவர் மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து தேவைகள் விநியோக ஒழுங்கமைப்பு முகாமைத்துவம் (Transport and Logical Management) கற்கைநெறி மாணவர் ஆவார். இந்த கருத்தரங்குத் தொடர் இவ்வளவு தூரம் வெற்றியடைவதற்கு இவர் தனது சிறந்த தலைமைத்துவத்தின் ஊடாக உரிய வழிக்காட்டல்களை வழங்கி சிறப்பாக ஒழுங்கமைத்து நடாத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 


நற்செயல்களில் அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது எது? என நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டப்பொழுது (எண்ணிக்கையில்) குறைவாக இருந்தாலும், (தொடர்ந்து செய்யப்படும்) நிலையான நற்செயலே! என்று விடையளித்தாரக்ள். மேலும் நற்செயல்கள் புரிவதில் இயன்றவரை அதன் எல்லையைத் தொட முயற்சி செய்யுங்கள் என்றும் கூறினார்கள். 

(நூல்:புகாரி 6465) 


அல்லாஹ்வின் துணைக்கொண்டு AUMSAவும் தன்னால் முடிந்த அளவு இவ்வறான நற்செயல்கள் புரிந்து வருகின்றது என்பதில் மிகவும் மனநிறைவு பெறுகின்றோம். மேலும் AUMSAவின் சேவைகள் தொடர வல்ல அல்லாஹ் உதவி புரிவானாக!   


ஜாஸிரா ஜுனைதீன் 

கொழும்பு பல்கலைக்கழகம்

AUMSA வின் தொண்டர் குழு அங்கத்தவர்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.