AUDIO 🔊: நீக்கப்படவிருக்கும் பயணத்தடை - விளக்கும் பொலிஸார்

AUDIO 🔊: நீக்கப்படவிருக்கும் பயணத்தடை - விளக்கும் பொலிஸார்

பயணத் தடை நீக்கப்படும் போது கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் அமல்படுத்தப்படும் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் சுரேஸ்ட பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பயணத் தடையானது நாளை அதிகாலை 4 மணிக்கு (ஜூன் 21 திங்கள்) நீக்கப்பட்டு, மீண்டும் ஜூன் 23 இரவு 10 மணிக்கு அமல்படுத்தப்படும். பின்பு ஜூன் 25 ஆம் தினது அதிகாலை 04 மணிக்கு பயணத்தடை நீக்கப்படவுள்ளது. 

நாளை சிறப்பு பொலிஸ் சோதனைச் சாவடிகள் நாடு முழுவதும் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்து கண்காணிக்கப்படும். மேலும் சூப்பர் மார்க்கட் மட்டும் பொது இடங்கள் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் எனவும் தெரிவித்தார். 

மேலும் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவையினை பயன்படுத்தும் போது பயணி, பஸ் நடத்துனர், பஸ் ஓட்டுனர் அனைவரும் முகக்கவசங்கள் அணிவது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்தார். மேலும் பொது போக்குவரத்து சேவைகளை உபயோகிக்கும் போது ஆசனங்களுக்கு ஏற்பவே பயணிகள் பயணம் செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

நாளைய தினம் அனுமதிக்கப்பட்டதை விளக்கும் பொலிஸ் செய்தித் தொடர்பாளரின் ஆடியோ  👇

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.