5 ஆயிரம் ரூபாவை கொடுக்க மறுத்த சமுர்த்தி அதிகாரியை தாக்கிய பெண்!

5 ஆயிரம் ரூபாவை கொடுக்க மறுத்த சமுர்த்தி அதிகாரியை தாக்கிய பெண்!


5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு இருக்கின்றதா எனக்கேட்டு பெண்ணொருவர் சமூர்த்தி அதிகாரியை தாக்கிய சம்பவம் ஒன்று இரத்தினபுரி மாவட்ட கொலோன்ன பிரதேச செயலாளர் பிரிவின் கெப்பனே கிராமத்தில் பதிவாகியது.


புஸ்வெல்பிட்டிய விகாரையில், மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை விநியோகிக்க சென்ற சமூர்த்தி அதிகாரியே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.


தாக்கிய பெண் 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு தனக்கு இருக்கின்றதா என சமூர்த்தி அதிகாரியிடம் கேட்டுள்ளார்.


அவருக்கு இல்லை என கூறியதும் சமூர்த்தி அதிகாரி மோட்டார் சைக்கிளில் இருந்தபோது, அந்த பெண் தாக்கியுள்ளார்.


தாக்குதலுக்கு உள்ளான அதிகாரி அது குறித்து பனாமுர பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.