அபராதம் ரூ. 5,000 முதல் ரு. 50,000 அதிகரிப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்!

அபராதம் ரூ. 5,000 முதல் ரு. 50,000 அதிகரிப்பு - வெளியான அதிர்ச்சித் தகவல்!

மூன்றாவது கொரோனா நெருக்கடி நிலைமை சற்று கடினமாக உள்ள போதும் அதனை நிச்சயமாக நாம் வெற்றி கொள்வோம் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

இது விடயமாக அவர் நேற்று ஊடகங்களுக்கு தகவல் தெரிவிக்கையில்,

பல வளர்ச்சியடைந்த உலக நாடுகளுக்கு முடியாததை நாம் சாதித்துக் காட்டினோம் தற்போதைய நிலைமை சற்று கடினமானது தான். ஆனால் இதற்கு பொதுமக்கள் தரப்பில் இருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு போதாது.

அதனால் சட்டங்களை கடுமைப்படுத்தி சட்டத்துக்கு முரணாக செயல்படுகின்றவர்களது தண்டனைகளை அதிகரித்தாவது இதனைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பயண கட்டுப்பாட்டை மீறுபவர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 5000 ரூபா அபராதத்தை வர்த்தமானி அறிவித்தல் மூலம் 50 ஆயிரம் வரையில் அதிகரித்து சட்டத்தை அமுல்படுத்தவுள்ளோம்.

இவ்விடயத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் முழுமையான பங்களிப்புடன் இலக்கினை அடைய முயற்சிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.