P2P பேரணியில் கலந்து கொண்டதற்காக வருந்துகிறேன்! மு.கா முன்னாள் எம்.பி நஸீர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

P2P பேரணியில் கலந்து கொண்டதற்காக வருந்துகிறேன்! மு.கா முன்னாள் எம்.பி நஸீர்


முஸ்லிம்களுக்கு செய்த அநியாயங்களை மறந்து சகிப்புத் தன்மையுடன் இன ஒற்றுமைக்காக விட்டுக் கொடுப்புகளை செய்தாலும் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் போன்ற தமிழ் அரசியல் வாதிகள் முஸ்லிம்களுக்கு எதிராகவே செயற்படுகின்றனர் என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.


நேற்று (05) அட்டாளைச்சேனையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,


யாழில் இருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள் 30 ஆண்டு காலமாக சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்கிறார்கள். கல்முனையில் இருக்கின்ற பிராந்திய சுகாதார பணிமனை முஸ்லிம்களுக்கு மாத்திரம் சேவை செய்யும் நிலையமல்ல. இங்கு தமிழ் பேசும் மக்களுக்கான சேவை நடைபெறுகிறது. இதன் பணிப்பாளராக ஒரு தமிழ் சகோதரர் கடமையாற்றுகின்றார். இந்த நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு இருக்கின்ற ஒரேயொரு வர்த்தக கேந்திர நிலையம் கல்முனையாகும். தமிழர்களுக்கு என்று மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம் என்று பல நகரங்கள் இருக்கின்ற நிலையில் முஸ்லிம்களுடைய ஒரு சொற்ப நிலத்தை நீங்கள் அபகரிக்க எத்தனிப்பது உங்களுடைய பாசிசத்தை தெட்ட தெளிவாக்கியுள்ளது.


எனவே உங்களது குறுகிய சிந்தனைகளையும் இனவாதத்தையும் கைவிட வேண்டும். சாணக்கியன் ஒரு சிறந்த அரசியல்வாதி என்ற நன் நோக்கில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான சாத்வீக போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். அது தவறு என்று இப்போது வருந்துகிறேன்.


கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பாக எமது கட்சி தலைவரோடும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்களோடும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளை பெறுவதற்கு தமிழ் மக்கள் முன்வர வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் மேலும் தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.