🔴 BREAKING: தளர்த்தப்படாது தொடர்ந்தும் அமுலாகும் பயணத்தடை!

🔴 BREAKING: தளர்த்தப்படாது தொடர்ந்தும் அமுலாகும் பயணத்தடை!

எதிர்வரும் 31 மற்றும் ஜூன் 04 ஆன் திகதிகளில் பயணக்கட்டுப்பாடு அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதும், மக்களின் நலனுக்காக  குறித்த இரு தினங்களிலும் பயணக்கட்டுப்பாடு தளர்த்தப்படாது தொடர்ந்து ஜூன் 07 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த முடிவை கொரோனா தடுப்பு பணிக்குழு எடுத்துள்ளது. 

அதன்படி, இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தங்கள் வீடுகளுக்கு விநியோகம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட தினத்தில் மக்களின் நடத்தை கொரோனா பரவுவதற்கான ஆபத்தினை ஏற்படுத்தி இருப்பதைக் கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டது. (யாழ் நியூஸ்)

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.