இம்முறை நோன்புப் பெருநாளுக்கான பிறை பார்ப்பது தொடர்பான அறிவித்தல் வெளியானது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இம்முறை நோன்புப் பெருநாளுக்கான பிறை பார்ப்பது தொடர்பான அறிவித்தல் வெளியானது!


இம்முறை புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை பார்க்கும் நாள் எதிர்­வரும் 12 ஆம் திகதி (ரம­ழான் பிறை 29) புதன்கிழமை மாலையாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


ஷவ்வால் மாதத்­திற்­கான பிறை பார்க்கும் மாநாடு எதிர்­வரும் புதன்கிழமை மாலை கொழும்பு பெரிய பள்­ளி­வா­சலில் இடம்­பெ­ற­வுள்­ளது. கொழும்பு பெரிய பள்­ளி­வாசல் நிர்­வா­கிகள், பிறைக்குழு உல­மாக்கள், அகில இலங்கை ஜம்­இய்­யதுல் உல­மாவின் பிறைக்­குழு உறுப்பினர்கள், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள அதி­கா­ரிகள், இலங்கை வளிமண்­ட­ல­வியல் திணைக்­கள சிரேஷ்ட உத்­தி­யோ­கத்தர், மேமன் ஹனபி பள்­ளி­வாசல் முக்கியஸ்­தர்­களும் இம்­மா­நாட்டில் கலந்­து­கொள்­ள­வுள்­ளனர்.


இதன்­போது, புனித ஷவ்வால் மாதத்­திற்­கான தலைப்­பிறை தொடர்­பான தீர்­மானம் மேற்­கொள்­ளப்­ப­ட­வுள்­ளது. எனவே, அன்­றைய தினம் மாலை பிறை பார்க்­கு­மாறு பெரிய பள்­ளி­வாசல் அறி­வித்­துள்­ளது.


அத்­துடன், பிறை தென்­பட்­டமை, இலங்கை ஒலி­ப­ரப்பு கூட்­டுத்­தா­பன முஸ்லிம் சேவை­யி­னூ­டாக உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­விக்­கப்­படும் எனவும், தலைப்­பிறை சம்­பந்­த­மான ஊர்­ஜி­த­மற்ற தகவல்­க­ளையோ வதந்­தி­க­ளையோ பகிர்­வதை தவிர்ந்­து கொள்­ளு­மாறும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் வேண்டுகோள் விடுத்துள்ளது.


தொடர்புகளுக்கு : 0112432110, 0112451245, 0777316415


-விடிவெள்ளி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.