லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது பதிப்பின் திகதியை இலங்கை கிரிக்கெட் அறிவித்தது!

லங்கா பிரீமியர் லீக்கின் இரண்டாவது பதிப்பின் திகதியை இலங்கை கிரிக்கெட் அறிவித்தது!


லங்கா பிரீமியர் லீக்கின் (LPL) 2 வது பதிப்பு இவ்வருடம் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 22 வரை நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் சபை இன்று அறிவித்துள்ளது.


"இந்த ஆண்டு LPL போட்டித்தொடரை நடத்துவதற்கு ஏற்ற சாளரத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம், அதே நேரத்தில் போட்டியின் பிற விவரங்களை முடுவு செய்வதில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்" என இலங்கை கிரிக்கெட் மேலாண்மைக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுனா டி சில்வா கூறினார் .


இலங்கையின் தலைசிறந்த உள்நாட்டு T20 லீக், சர்வதேச வீரர்கள் கலந்த  எல்.பி.எல் இன் முதல் பதிப்பு கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது, இது ஹம்பாந்தோட்டையில் MRICS இல் 05 அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்றது.


இதன் முதல் பதிப்பு வெற்றிகரமான பயோ-பப்பில் சூழலில் நடைபெற்றது, அதே நேரத்தில் இந்த போட்டித்தொடரின் இறுதி முடிவை எடுப்பதற்கு முன்னர் நாட்டின் நிலைமையை மதிப்பிடுவதோடு,  நாட்டின் சுகாதார நிலைமையை அறிந்து கொள்வதற்காக போட்டித்தொடரை அண்மிக்கும் நேரத்தில் சுகாதார அமைச்சகத்துடன் . இலங்கை கிரிக்கெட் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.