இன்று காலை முதல் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

இன்று காலை முதல் பல கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டன!

4 மாவட்டங்களைச் சேர்ந்த 12 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொழும்பு, கம்பஹா, இரத்தினப்புரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலேயே இவ்வாறு தனிமைப்படுத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் மஹரகம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பமுனுவ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் பிலியந்தலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹொன்னத்தர மற்றும் தல்தர ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் கிரிந்திவெல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குட்டிவில கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, இரத்தினப்புரி மாவட்டத்தில் எம்பிலிபிட்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பல்லேகம, உடகம, புதியநகரம் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பணாமுர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வலல்கொட, சுதுகல, பணாமுர ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் மற்றும் வேவல்வத்த காவல்துறை அதிகாரப் பிரதேசத்திற்கு உட்பட்ட ரத்கம கிராம சேவகர் பிரிவு என்பன தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்

கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post