இஸ்ரேல் பலஸ்தீன் யுத்த நிறுத்தம் ஓர் ஆய்வு! -பேருவலை ஹில்மி

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்ரேல் பலஸ்தீன் யுத்த நிறுத்தம் ஓர் ஆய்வு! -பேருவலை ஹில்மி


கடந்த சில வாரங்களாக பலஸ்தீனின் ஹமாஸ் போராளிகளுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நடந்த கடும் யுத்தம் நிறுத்தப்பட்டு, யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுதப்பட்டுள்ளது. 


யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் பலஸ்தீனை விட இஸ்ரேலே ஆர்வம் காட்டியது குறிப்பிடத்தக்கது. ஒப்பந்தத்தில் இஸ்ரேல் ஆர்வம் காட்டியதானது, உலக அரங்கில் இஸ்ரேல் பலஸ்தீனிடம் தோல்வியடைந்து விட்டது, பலஸ்தீனிடம் பங்காரமான நவீன ஆயுதங்கள் இருக்கின்றன, என்ற ஒரு கருந்து உலகில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


இந்த செய்திகளையும் கானொளிகளையும் இன்று முஸ்லிம்களும், முஸ்லிம்களுக்கு எதிரான ஊடகங்கள், Social Media க்கள் மூலமாக பகிந்து, பலஸ்தீனிடம் பயங்கர நவீன ஆயுதங்கள் உண்டு என்ற விளம்பரத்தையும் முஸ்லிம் உலகமே விளம்பரம் செய்து, உலக முஸ்லிம் எதிரிகளிடம் காட்டிக் கொடுப்பும் செய்யப்படுகிறது. இக்கானொளிகளையும், செய்திகளையும்நாமும்  ஆர்வக் கோலாறு காரணமாக கூடுதலாக பரப்பிக் கொண்டிருக்கிறோம். 


இதனால் நடந்தது என்ன?


இதனால் இன்று உலகத்தில் பலஸ்தீன் மக்களுக்காக ஒலித்த குரல்கள் ஓய்ந்து விட்டன. ஆர்பாட்டங்கள் தளர்வடைந்து விட்டன. இஸ்ரேலுக்கு எதிராக உலகம் கொதித்த நிலை மாறி, இஸ்ரேலுக்கு எதிரான எதிப்பு அலைகள் ஓய்ந்து விட்டன. இஸ்ரேலுக்கு எதிரான உலக அழுத்தம் இழந்து விட்டது. பலஸ்தீன் மக்களுக்காக உலக முஸ்லிம்களினதும் ஏனை மக்களினதும் ஆதரவுகள், முஸ்லிம்களின் பிராத்தனைகள்  ஓய்வுக்கு வந்து விட்டன. ஆனைத்தும் திசை திருப்பப்பட்டு விட்டது.


அடுத்து நடக்கப்போவது என்ன?


அண்மைக் காலத்தில் முஸ்லிம் நாடுகள் அழிக்கப்பட்ட வரலாறுகளில் இவ்வாறான ஒரு சூழ்ச்சிகரமான நடவடிக்கையே எதிரிகளால் கைக் கொள்ளப்படது. ஈராக்கை அழிக்க முன்வைத்த முதல் குற்றச்சாட்டு, ஈராக்கிடம் பயங்கரமான, ஈராக்குடன் மோத முடியாத அளவு பயங்கரமான உலகை அச்சுறுத்தும் ஆயுதம் உள்ளது. இது உலகில் பெரிய அழிவை ஏற்படுத்தும் என, இது போன்ற ஓரு நாடகமே அங்கும் அரங்கேற்றப்பட்டது. அடுத்து சிரியாவை அழிக்கவும் இவ்வாறான ஒரு தந்திரங்கள் கையாளப்பட்டன.லிபியாவில் அமெரிக்காவின் கைப்பொம்மைகள் ஆற்சியாளர்களை நியமிக்க இவ்வாறான இடத்திற்கு ஏற்றவாறு சற்று வேறுபட்டட உத்திகளே கையாளப்பட்டன.


எனவே தற்போது பலஸ்தீன் வியத்திலும் பலஸ்தீனிடம் அதி நவீன ஆயுதங்கள் உள்ளன. அதனாலலேயே இஸ்ரேல் பின்வாங்கியது என்ற ஒரு கருத்து உலக media க்களால் முன்வைக்கப்பட்ட நிலையில், இக்கருத்து முழு உலகிலும் விதைக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆயுத உதவியும் ஏனைய உதவிகளையும் வழங்கி பகிரங்கமாக களத்தில் குதித்த நிலையில் இவ்வாறான ஒரு அறிவிப்பின்  ஆழம் என்ன ? பலஸ்தீன் விடயத்தில் சர்வதேச யுத்த தந்திரங்கள் என்ன என்பதை காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.


உலகளாவிய ரீதியில் முஸ்லிம் இன அழிப்பு பாரிய ஒரு வலையமைப்பில்

சர்வதேச சதித் திட்டங்களுடன் செயற்படும் நிலையில்  இவர்களின் அதிசயிக்கத்தக்க  ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தம் நாடுகளுக்கிடையிலான யுத்த வரலாறுகளை நோக்கும் போது இவர்களின் இவ்வாரான ஒரு குற்றச்சாட்டு ஈராக்கினை ஆயுதக் குற்றச்சாட்டை வைத்து அழித்தது போல் பலஸ்தீனின் விடயத்திலும் இனி வரும் காலங்களில் செயற்படுமா? 


எவ்வாறாயினும் சுமார் நூற்றி நாற்பது விமானங்களை கொண்டு சிறிய பலஸ்தீனைத் தாக்கிய கொடுரமான விடயம் பேசப்படாமல், பலஸ்தீனின் நவீன ஆயுதம் பற்றிப் பேசும் நடவடிக்கை ஒரு சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. 


யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் அதில் எந்த நாடும் மாற்றுக் கருத்தில்லை. முழு உலகமும் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்திய போதிலும், அதை நிறுத்த முன்வைத்த மறைமுகமான குற்றச் சாட்டைப்பற்றியே சிந்திக்க வேண்டியுள்ளது.


-பேருவலை ஹில்மி


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.