நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பு!

நாட்டில் இதுவரை தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் தொடர்பான அறிவிப்பு!


கொரோனா பரவலைத் தொடர்ந்து, நாட்டில் தற்போது வரை 13 மாவட்டங்களில் 74 கிராம அலுவலர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொரோனா  பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

இதேவேளை, இன்று (04) முற்பகல் 7.00 மணி முதல் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய 5 மாவட்டங்களிலுள்ள 8 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 9 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்கப்பட்டதற்கு அமைய, தற்போது நாட்டில் 74 கிராம அலுவலர் பிரிவுகள் முடக்க நிலையில் உள்ளன.

இதேவேளை குருணாகல், மாத்தளை மாவட்டங்களிலுள்ள 6 பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசங்களும் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.