
மாலைதீவு நாடாளுமன்றத்தின் சபாநாயகரும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியுமான முஹம்மத் அப்துல்லா நஷீத் மீது நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலை இலங்கை கண்டிக்கின்றது.
இதனை இலங்கை வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று மாலத்தீவின் தலைநகரில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே ஏற்பட்ட வெடிவிபத்தில் காயம் அடைந்த நிலையில் முஹம்மத் அப்துல்லா நஷீத் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளார்.
மிகவும் முக்கியமான இந்த தருணத்தில், இலங்கை மக்களும் அரசாங்கமும் அனைத்து வகையான வன்முறைகளையும் வன்மையாகக் கண்டிக்கும் அதே வேளையில், மாலைதீவு மக்களுக்கும் அரசாங்கத்துக்குமான தனது ஒற்றுமையை ஒன்றிணைந்து வெளிப்படுத்துகின்றன.