சாணக்கியனின் கோரிக்கையை அடுத்து மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சாணக்கியனின் கோரிக்கையை அடுத்து மூடப்பட்ட ஆடைத் தொழிற்சாலை!


மக்களினதும், ஊழியர்களினதும் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் தனது கோரிக்கையினை அடுத்து மட்டக்களப்பி உள்ள தனியார் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


இன்று (26) விசேட காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ள இரா.சாணக்கியன் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.


இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர், 


இன்றைய தினம் மட்டக்களப்பிலுள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலையின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பானவரிடம் நான் தொலைபேசி ஊடாக முன்வைத்த வேண்டுகோளுக்கு அமைவாக எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த ஆடை தொழிற்சாலையினை தற்காலிகமாக மூடுவதற்கான முடிவினை தாங்கள் எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.


நான் கடந்த வாரம் குறித்த ஆடைத்தொழிற்சாலைக்கு சென்ற போது, பல்வேறு விமர்சனங்களை ஒருசிலர் முன்வைத்திருந்தனர். இது எங்களுடைய பொருளாதாரத்தினை கட்டியெழுப்பும் ஒரு விடயம், அவர்கள் எத்தனையோ இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் வேலைவாய்ப்பினை வழங்குகின்றனர். இதை நீங்கள் மூடுமாறு கோருவது தவறு என ஒருசிலர் விமர்சித்திருந்தனர்.


உண்மையிலேயே நான் அந்த விடயத்தினை சொன்னதற்கான காரணம், என்னவென்றால், சுமார் 30 பேர் வரையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், மேலும் அது மாவட்டத்திற்குள் பரவக்கூடாது என்ற அடிப்படையிலேயே, அதை தற்காலிகமாக மூடுமாறு நான் கோரியிருந்தேன்.


இந்நிலையில் நான் குறித்த ஆடைத்தொழிற்சாலையின் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பானவருக்கு நான் நன்றி கூற வேண்டும். முகநூலில் நான் பதிவிட்ட விடயத்தினை பார்த்துவிட்டு என்னுடன் தொடர்பு கொண்டு பேசி, தாங்கள் ஞாயிற்றுக்கிழமை வரை தற்காலிகமாக மூடுவதாக தெரிவித்தனர்.


அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை மீள்பரிசோதனை செய்து அதனை திறப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தினை எடுப்பதாகவும் குறிப்பிட்டனர் எனத் தெரிவித்துள்ளார்.


-தெரண


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.