🚨 நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

🚨 நாளொன்றில் பதிவான அதிகளவான கொரோனா மரணங்கள் நேற்று பதிவு!

இலங்கையில் நேற்று (20) கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதயைடுத்து, மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,089 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் நாட்டில் கொவிட் 19 நோய்த்தொற்றின் மிக அதிகமான தினசரி இறப்பு எண்ணிக்கை இதுவாகும்.

இதுவே இலங்கயைில் அதிகரித்த உயிரிழப்பு பதிவான முதல் சந்தர்ப்பமாகும்.

இது மே 7 ஆம் திகதி முதல் மே 20 ஆம் திகதி வரை பதிவான உயிரிழப்புகளில் ஒரே நாளில் பதிவான அதிகரித்த உயிரிழப்புகளாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களும், 19 பேர் ஆண்களும் அடங்குவர்.

இறந்தவர்கள் உடுகித்த, லுனுகல, பலாங்கொட, கட்டுநாயக்க, பாந்துருகொட, கொச்சிக்கடை, நீர்கொழும்பு, தலாத்துஓய, பண்டார கொஸ்வத்த, பொரல்ல, பாதெனிய, தோரயாய, பொல்கஹவெல, கல்கமுவ, சியம்பலாபே, மத்துகம, எதென்னவத்த, நாவலப்பிட்டி, குருநாகல், யட்டியாந்தோட்டை, பொல்கஹவெல, பெலிஹூல்ஒய, நேபட, கெக்குனுகொல்ல, நிக்கவெரட்டி, வரக்காபொல, அம்பிட்டி, மாரஸ்ஸன, ரஜவெல்ல, உடிஸ்பத்துவ மற்றும் ஹபராதுவ போன்ற பிரதேசங்களை வதிவிடமாகக் கொண்டவர்களைக் கொண்டவர்கள்.

அவர்களில் 24 பேர் 71 வயதைக் கடந்தவர்களாவர், 10 பேர் 61 தொடக்கம் 70 வயதிற்கிடைப்பட்டவர்கள், ஒருவர் 51 தொடக்கம் 60 வயதிற்கிடைப்பட்டவர், ஒருவர் 41 தொடக்கம் 50 வயதிற்கிடைப்பட்டவர், ஏனைய இருவரும் 31 தொடக்கம் 40 வயதிற்கிடைப்பட்டவர்கள் ஆவர்.

கொவிட் நியூமோனியா, நீரிழிவு, இதயநோய் உள்ளிட்ட நாட்பட்ட நோய்களுடன் உருவாகிய சிக்கலான நிலைமைகள் மரணங்களுக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களில் 19 பேர் பெண்களாவதுடன், ஏனையோர் ஆண்களாவர்.


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.