
இறந்தவரிடமிருந்து வைரஸ் பரவுவதற்கான ஆபத்து மிகவும் குறைவாகும். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடலில் மூக்கு மற்றும் தொண்டையில் 12 முதல் 24 மணி நேரத்திற்கு மேல் கொரோனா வைரஸ் செயல்பாட்டில் இருக்காது.
100 பேரின் உடல்களை சோதனை செய்தபோது இது எங்களுக்கு தெரியவந்தது. ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கையாள்பவர்கள் முககவசங்கள், கையுறைகள் மற்றும் பி.பி.இ கிட்கள் அணிந்து கொள்ளலாம்.
உயிரிழந்தவர்களின் எலும்புகள் மற்றும் சாம்பலை(அஸ்தியை) சேகரிப்பது முற்றிலும் பாதுகாப்பானது. இதில் இருந்து கொரோனா பரவுவதற்கான வாய்ப்பு முற்றிலும் கிடையாது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்