கொரோனா: கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

கொரோனா: கொரோனா தொற்றாளர் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோட்டம்!

தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார். இந்த தகவலை பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன உறுதிப்படுத்தினார்.

அம்பாறையை சேர்ந்த முகமட் ரிகாஸ் என்பவரே தப்பிச்சென்றுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே அவர் தப்பிச் சென்றுள்ளதாகவும் குறித்த நபர் குறித்த தகவல்களை கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு வழங்குமாறு பொதுமக்களை பொலிஸ் பேச்சாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை கொவிட்டினால் பாதிக்கப்பட்ட பூசா சிறைச்சாலையை சேர்ந்த கைதியொருவர் சிகிச்சை நிலையமொன்றிற்கு அழைத்துச்செல்லப்படும் வேளை தப்பிச்சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.