நாளை முதல் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!

நாளை முதல் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட அறிவித்தல்!


நாடு முழுவதும் அமுலில் உள்ள பயணத் தடை நாளை (17) அதிகாலை 4.00 மணியுடன் தளர்த்தப்படவுள்ளது. 


இந்நிலையில், தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, நாளைய தினம் முதல் பொதுமக்களுக்கு வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.


இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக (1,3,5,7,9) கொண்டிருக்கும் நபர்கள், ஒற்றை இலக்க திகதிகளில் வெளியில் செல்ல முடியும். அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை இரட்டை எண்ணாக (0,2,4,6,8) கொண்டிருக்கும் நபர்கள், இரட்டை இலக்க திகதிகளில் வெளிச்செல்ல முடியும். பூச்சியம் (0) எனின் அது இரட்டை எண்ணாக கருதப்படும் என அவர் தெரிவித்தார். 


நாளைய தினம் 17ஆம் திகதி என்பதனால், அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தை ஒற்றை எண்ணாக கொண்டவர்கள் மாத்திரம் வீடுகளிலிருந்து வெளியில் செல்வதற்கு அனுமதிக்கப்படுவர்.


இந்த முறைமையை மீறுகின்றவர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.


எவ்வாறாயினும், அத்தியாவசிய தேவைகளுக்கு பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொழிலுக்கு செல்பவர்கள் இந்த முறைமையை பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.


ஏனைய செயற்பாடுகளுக்காக வெளியில் செல்பவர்கள் கட்டாயமாக அடையாள அட்டை முறைமையை பின்பற்ற வேண்டும். நாளை (17) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரையில் இந்த முறைமை அமுலில் இருக்கும்.


அவ்வாறானால், குறித்த 14 நாட்களில், அடையாள அட்டை முறைமையின் அடிப்படையில், ஒருவருக்கு 7 நாட்கள் மாத்திரமே வெளியில் செல்ல அனுமதி வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.