ஏறாவூரில் விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பதிவேற்றிய நபர் கைது!

ஏறாவூரில் விடுதலை புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கருத்து பதிவேற்றிய நபர் கைது!


தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துகளை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஒருவரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.


இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, 


ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செங்கலடி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய நவநீதன் பிள்ளை மோகன் என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து தொலைபேசி, நவீன கணினி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.


சந்தேக நபருக்கு சொந்தமான இணையவழி கணக்குகளை சோதனைக்கு உட்படுத்தியபோது, அவர் இவ்வாறான கருத்துகளை பதிவேற்றியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பாக மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் தலைமையின் கீழ் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. விசாரணைகளுக்கு குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவினரிடமும் ஒத்துழைப்பு பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.


தற்போது பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைக்கப்பட்டுள்ள குறித்த சந்தேக நபருக்கு எதிராக நீதிவான் நீதிமன்றங்களில் 14 வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர் என்றார்.


கருத்து தெரிவிக்க..

Previous Post Next Post