சுமார் 600 பேருக்கான கொரோனா தடுப்பூசிகள் வீணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சுமார் 600 பேருக்கான கொரோனா தடுப்பூசிகள் வீணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் ஒன்று பதிவு!


இரண்டாம் கட்டமாக தடுப்பூசிகளை ஏற்றும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், சுமார் 600 பேருக்கு ஏற்றக்கூடிய கொரோனா தடுப்பூசி மருந்து வீணான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.


அதிகாரிகளின் அசமந்த போக்கினால், வீணாகிப்போன அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளன என சுகாதார அமைச்சின் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலை ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இரண்டாம் கட்ட தடுப்பூசிகள், வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு ஏற்றும் நடவடிக்கை சனிக்கிழமை (01) இடம்பெற்றது.


அச்செயற்பாடு, மாலை 5.00 மணியுடன் நிறைவடைந்தது. அதில், மருந்து நிரப்பப்பட்ட 57 குப்பிகளை குளிர்சாதனப் பெட்டியில் வைக்காமல், வெளியிலேயே வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.


நேற்று (03) காலையில், ஏனையோருக்கு தடுப்பூசி எற்றுவதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால்,  4 பாகை தொடக்கம் 8 பாகை வெப்பத்தில், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படவேண்டிய தடுப்பூசி மருந்துகள் வெளியில் வைக்கப்பட்டுள்ளன.


கிட்டத்தட்ட 15 மணித்தியாலங்களுக்கு மேல் வெளியில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த  தடுப்பூசி மருந்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


ஒரு குப்பியிலுள்ள மருந்து, 10 பேருக்கு ஏற்ற முடியும். அங்கு சுமார் 57 மருந்து குப்பிகள் வீணாகியுள்ளன. இதனால், சுமார் 570 பேருக்கு ஏற்றக்கூடிய மருந்து குப்பிகள் வீணாகி போகியுள்ளன.


அதிகாரிகளின் அசமந்த போக்கினால் இப்படி வீணாகிபோன கொரோனா தடுப்புமருந்து குப்பிகள் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள என்றும் அவ்வதிகாரி தெரிவித்தார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.