முகக்கவசம் அணியாது சுற்றித் திரிபவர்கள் தொடர்பில் வெளியான செய்தி!

முகக்கவசம் அணியாது சுற்றித் திரிபவர்கள் தொடர்பில் வெளியான செய்தி!

முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து அழைத்துச் செல்லப்படமாட்டாது என சிறப்பு சுற்றறிக்கை ஒன்றை இலங்கை பொலிஸ் வெளியிட்டுள்ளது.

அழைத்துச் செல்லப்படுபவர்களில் எவறேனும் கொரோனா தொற்றுக்கு இலக்காகி இருந்தால் பொலிஸ் அதிகாரிகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கையினூடாக அறிவுருத்தப்பட்டுள்ளது.

ஒரே வாகனத்தில் இவ்வாறு கைது செய்து அழைத்துச் செல்வது கொரோனா வைரஸ் பரவக்காரணமாய் அமையக்கூடும் என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

எனவே, எதிர்காலத்தில் இவ்வாறு முகக்கவசம் அணியாதவர்களை கைது செய்து ஒரு வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டாம் என்றும் ஐ.ஜி.பி அறிவுறுத்தியுள்ளார்.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.