திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்!

திருமண நிகழ்வுகள் மற்றும் மரணச் சடங்குகள் குறித்து வெளியிடப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள்!


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, திருமண நிகழ்வுகள், மரணச் சடங்குகள் குறித்து முக்கிய தீர்மானம் ஒன்று எட்டப்பட்டுள்ளது. 


அந்தவகையில், திருமண நிகழ்வுகளை மறு அறிவித்தல் வரை நடத்த முடியாதென்றும், பதிவு திருமணத்திற்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், குறித்த திருமண நிகழ்வில் ஆகக்கூடியதாக 15 பேர் மாத்திரமே பங்குபற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அத்தோடு, கொரோனா நோயல்லாது உயிரிழப்பவர்களின் உடல்களை வைத்தியசாலையில் இருந்து ஒப்படைக்கப்பட்டு 24 மணித்தியாலத்திற்குள் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


மேலும், மரண நிகழ்வில் ஒரே தடவையில் ஆகக்கூடியது 15 பேர் மாத்திரமே பங்குப்பற்ற முடியும் என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.