துறைமுக நகர விவகாரம்; நீதிமன்ற தீர்ப்புக்கு அரசு இணக்கம்!

துறைமுக நகர விவகாரம்; நீதிமன்ற தீர்ப்புக்கு அரசு இணக்கம்!


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் பெற்றுக் கொடுத்துள்ள தீர்ப்பு மற்றும் திருத்தம் தொடர்பில் அரசாங்கம் உடன்படுவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அதன்படி, குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றின் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றிக் கொள்ள கூடியதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் சில சரத்துக்கள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணாக இருப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறிப்பிட்ட சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு சர்வஜன வாக்கெடுப்பும், விசேட பெரும்பான்மையும் அவசியம் எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டிருப்பதாக சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

குறித்த சரத்துக்களை திருத்தம் செய்ய வேண்டிய முறை தொடர்பிலும் உயர் நீதிமன்ற தீர்ப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகநகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பு 62 பக்கங்களை கொண்டிருந்தது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, பிரியந்த ஜயவர்தன, முர்த்து பெர்ணான்டோ மற்றும் ஜனக த சில்வா ஆகியோரினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.