மேலுமொரு பாதாள உலக தலைவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!

மேலுமொரு பாதாள உலக தலைவர் பொலிஸாரால் சுட்டுக் கொலை!


இன்று (13) அதிகாலை இலங்கையின் பயங்கரமான பாதாள உலகத் தலைவரான கொஸ்கொட தாரக என அழைக்கப்படும் தாரக பெரேரா விஜேசேகர பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பேலியகொட சிறப்பு குற்றப்பிரிவின் தடுப்புக்காவலில் இருந்த, சமயத்தில் இந்த சம்பவம் நடந்தது.

இன்று அதிகாலை மீரிகமவில் சில ஆயுதங்களை மீட்டெடுக்க தாரகவை அழைத்து சென்ற போது பொலிஸாரைத் தாக்க முயன்றபோது சுட்டுக் கொல்லப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, நேற்று முன்தினம் இரவு ஒரு பாதாள உலகக்குழு உறுப்பினர் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து, கொஸ்கொட தாரகவின் சட்டத்தரணி, தாரகவின் பாதுகாப்பு குறித்து கவலை தெரிவித்து பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.