தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் வேண்டுகோள்!

தடுப்பூசி ஏற்றிக்கொள்வது தொடர்பாக இலங்கை மருத்துவர் சங்கத்தின் வேண்டுகோள்!


கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி ஏற்றிக்கொள்வது மிகவும் அவசியமானது என இலங்கை மருத்துவர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.


உலக சுகாதார இஸ்தானம் இதுவரையில் ஏழு கொரோனா தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக சங்கத்தின் தலைவர் நிபுணத்துவ வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.


இந்த அனுமதி அளிக்கப்பட்ட எந்தவொரு தடுப்பூசியையும் மக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


இந்த அனைத்து தடுப்பூசிகளினாலும் 65 வீதத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்பு கிடைப்பதாகவும், தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டாலும் 90 வீதமான பாதுகாப்பு கிடைக்கும் எனவும், தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற நேரிடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


முதல் சந்தர்ப்பத்திலேயே கிடைக்கும் ஏதேனும் ஓர் வகை தடுப்பூசியை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.


கர்ப்பிணி பெண்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமெனவும், வைரஸ் தொற்றுக்களிலிருந்து அவர்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த நோய்த் தொற்று சிறுவர்களுக்கு தொற்றாது என்று கூற முடியாது எனவும், சிறுவர்களுக்கும் நோய்த் தொற்று தாக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.