ஒட்சிசனின் தேவை அதிகரிப்பால் பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ள இலங்கை!

ஒட்சிசனின் தேவை அதிகரிப்பால் பெரும் நெருக்கடியை சந்திக்கவுள்ள இலங்கை!


தற்போது கொரோனா தொற்றுக்கான மிக முக்கியமான மருத்துவத் தேவையாக ஒக்சிசன் கருதப்படுகிறது. இந்நிலையில் ஒக்சிசனின் கையிருப்பு குறைவாகவே உள்ளது. எனவே அதிகாரிகள் ஒரு பாரிய நெருக்கடியைத் தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் மருத்துவ நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


மருத்துவ நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்திய கலாநிதி லக்குமார் பெர்னாண்டோ இது தொடர்பில் கருத்துரைத்துள்ளார்.


ஒக்சிசன் மற்றும் அதிதீவிர சிகிச்சைப் பராமரிப்பு ஆகியவை கொரோனா சிகிச்சையில் முக்கியமான பங்கை வகிக்கின்றன, அத்துடன்; பேரழிவைத் தவிர்க்க வேண்டுமானால் ஒக்சிசன் வழங்கப்பட்ட படுக்கைகள் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.


ஒக்சிசன் பற்றாக்குறையால் இந்தியா இப்போது பெரும் கஷ்டங்களை எதிர்கொள்கிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


தமது அறிவுக்கெட்டியவரை இலங்கையில் சுகாதார வசதிகளுக்கு ஒக்சிசனை வழங்கும் இரண்டு நிறுவனங்கள் உள்ளன, இந்த உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்தியை கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரிக்க முடியும். இப்போது அவர்கள் ஒரு நாளைக்கு சுமார் 75 தொன் ஒக்சிசனை உற்பத்தி செய்கிறார்கள்.அதில் ஒரு பகுதி தொழில்துறை பயன்பாட்டிற்கு வழங்கப்படுகிறது என்று பெர்ணாண்டோ கோடிட்டுக் காட்டியுள்ளார்.


இந்த ஒக்சிசனை நோயாளியின் படுக்கைக்கு வழங்குவதே தற்போது பிரச்சினையாக உள்ளது. இதைச் செய்வதற்கான சிறந்த வழி, சிலிண்டர்களை பயன்படுத்துவதை விட மைய திரவ ஒக்சிசன் தொட்டியில் இருந்து குழாய் ஒக்சிசனை விநியோகிப்பதாகும்.


துரதிர்ஷ்டவசமாக, முழு நாட்டிலும் இதுபோன்ற 28 திரவ ஒக்சிசன் தொட்டிகள் மட்டுமே மருத்துவமனைகளில் நிறுவப்பட்டுள்ளன. அளவுகள் 3,000 முதல் 20,000 லிட்டர் வரை இருக்கும், ஆனால் தேசிய மருத்துவமனையில் தலா இரண்டு 20,000 அளவு கொள்கலன்கள் மட்டுமே உள்ளன என்று அவர் தெரிவித்துள்ளார்.


எனவே பெரும்பாலும் ஜம்போ சிலிண்டர்களை (பாரிய வாயுக் கொள்கலன்களை) சார்ந்து இருக்க வேண்டும், எனவே தற்போதைய கொரோனா நிலைமையை எதிர்கொள்ள விஞ்ஞான உண்மைகள் மற்றும் பகுத்தறிவு சிந்தனையின் அடிப்படையில் உடனடி முடிவுகளை எடுக்குமாறு அதிகாரிகளை வைத்திய கலாநிதி லக்குமார் பெர்னாண்டோ வலியுறுத்தியுள்ளா


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.