இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றி ரவூப் ஹக்கீம் கண்டனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இஸ்ரேலின் அடாவடித்தனம் பற்றி ரவூப் ஹக்கீம் கண்டனம்!


“இஸ்ரேலுக்கு தற்காத்துக் கொள்வதற்கான உரிமை உண்டு” என கிளிப்பிள்ளைப் போன்று அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் “இந்தப் பிரச்சினை விரைவிலோ அல்லது பின்னரோ தீரும்” எனவும் தெளிவில்லாமல் எதையோ உளறியிருக்கின்றார். சுதந்திரமான உலக நாடொன்றின் தலைவர் இவ்வாறு பரிதாபமான தொனியில் முணுமுணுப்பார் என நாங்கள் எதிர்பார்க்கவே இல்லை. இனரீதியான ஒதுக்களைக் கடைப்பிடித்துவரும் இஸ்ரேல் அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற உதவிகளை வழங்குவதை நிறுத்துங்கள்.

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு பெரும்பாலும் தூண்டப்படாமலேயே தங்குதடையின்றித் தொடர்கின்றது. ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூஸலத்தில் மனிதப் படுகொலையை நிறுத்த ஐ.நா. சபையும், இஸ்லாமிய நாடுகளின் ஒன்றியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இஸ்ரேலின் மிலேச்சத்தனத்தை திசைத்திருப்புவதற்காக ஹமாஸ் மீது பாரபட்சமான முறையில் பழி சுமத்துவதை ஐக்கிய இராச்சியத்திற்கான பலஸ்தீனத் தூதுவர் தோலுரித்துக் காட்டியுள்ளார். "நோயின் அறிகுறிகளைத் தேடுகின்றீர்களே தவிர, நோய் எங்கேயிருக்கின்றது என்பதைக் காண்கிறீர்கள் இல்லை" என தெரிவித்துள்ளார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.