கத்தாரில் வியாழன் அன்று நோன்பு பெருநாள்!

கத்தாரில் வியாழன் அன்று நோன்பு பெருநாள்!


கத்தாரில் ஈத் அல் பித்ரின் முதல் நாள் 2021 மே 13 வியாழக்கிழமை என்று அவ்காஃப் மற்றும் இஸ்லாமிய விவகார அமைச்சின் பிறை பார்க்கும் குழு அறிவித்துள்ளது.


அமைச்சின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தைத் தொடர்ந்து, அதன் தலைவர் ஷேக் டாக்டர் தாகில் அல் ஷம்மாரி தலைமையிலான குழு இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.


அந்த அறிக்கையில், பிறை பார்க்கும் குழு இன்று மக்ரிப் தொழுகைக்கு பின்னர் ஷவ்வால் மாதத்திற்கான பிறை பார்த்த நிலையில், பிறைக்கான அறிகுறி உறுதிப்படுத்தப்படவில்லை என்று அக்குழு கூறியது. 


இதன் விளைவாக, நாளை 2021 மே 12 புதன்கிழமை ரமழானின் கடைசி நாளாகவும், நாளை மறுநாள் வியாழக்கிழமை ஈத் அல் பித்ரின் முதல் நாளாகவும் இருக்கும் என தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.