குழந்தைக்கான ஊக்கமும் இன்றைய நிலையும்!

குழந்தைக்கான ஊக்கமும் இன்றைய நிலையும்!


தலைப்பே ஓர் தனித்துவத்துவமான ஊக்கத்தை தரும் என்று நம்புகிறேன்.


விடயத்துக்குள் வர முன் விலாசத்தை விலக்க முற்படுகிறேன். இங்கு, "குழந்தை" எனப்படுவதை நாம் அறிவோம். குழந்தைக்கான ஊக்கம் என்று சொல்லப்படும் போது, வெற்றியின் போது தட்டிக்கொடுப்பது என்று சிலர் நினைப்பர், பெற்றோர்களும் கூட..


இல்லை.. இல்லை.. அவ்வாறில்லை. மாற்றமாக, குழந்தை சரிந்து விழுந்தாலும், சந்தோஷமாக "என் குழந்தை சாகசம் படைக்க போகிறது" என்று வாழ்த்தி வாரியணைக்க வேண்டும்..


இதனை ஒரு உண்மை சம்பவத்துடன் உங்களிடம் சமர்ப்பிக்க போகின்றேன்.


நீங்கள் தயாரா, நான் சொல்வதை கேட்க?


உங்கள் மனக்கண்ணை கொண்டு மறுக்காமல் வாசியுங்கள் எனதருமை பெற்றோர்களே, பெரியோர்களே!


அவ்வுண்மை கதை தொடர்கிறது..


ஓர் பாடசாலையில் மிகப் பெரிய விழா நடக்கின்றது..


மேடையில், எல்லோரும் சிறப்பாக அவரவர் நிகழ்ச்சிகளை நிரப்பமாக செய்கின்றனர்..


இறுதிக்கு முன்னரான நிகழ்ச்சியானது, குழு ஆட்டம் (Group Dancing) அதில் எல்லோரும் சிறப்பாக நடித்தனர், ஒரேயொரு குழந்தையை தவிர..


எல்லோரின் பார்வையும் அக் குழந்தையின் மீது தான்.. எல்லோரின் பேச்சும் அக்குழந்தையை பற்றி தான்..


நிகழ்ச்சியின் இறுதியில் அக்குழந்தையின் தந்தை கோபத்துடன் குழந்தையை நோக்கி செல்லவே, ஆசிரியரும் அதிரடியாக குறுக்கே வந்தார்..


ஆசிரியர் கேட்டார், 'இப்போது என்ன நடந்து விட்டதென்று கோபமாக இருக்கிறீர்?' என்ற வினாவை தொடுக்க, 'என் மக(ள்)ன் எதுவும் செய்யாமல் உறைந்து நின்றா(ளே)னே' என்ற பதில் பெறப்பட்டது..


ஆசிரியரும் தொடர்ந்தார், 'என்னை பொறுத்த மட்டில் உங்கள் குழந்தை தான் சாதித்தது என்று கூற, எப்படி சொல்ரீங்க சார்? என்று அக்குழந்தையின் தந்தையான அவர் தான் கேட்டார்..


ஆசிரியரும் தன் பதிலை தொடர்ந்தார், "அனைத்து குழந்தைகளும் ஆட, உங்கள் குழந்தை அசால்டாக நின்றது. என்றாலும் உங்கள் குழந்தையை தான் அனைவரும் கண்ணோட்டமிட்டனர். இங்கு தான் விடயம் இருக்கிறது. வித்தியாசமான நல்ல முறையில் உலகத்தில் உலாவுவதற்கும் சாதிப்பதற்கும் கற்றுக் கொடுங்கள்." 


மேலும் கூறுகையில், 


"உங்கள் குழந்தைக்கு இங்கே நீங்கள் தட்டிக் கொடுப்பது தான், தரணியெங்கும் அவன் புகழ் ஓங்க காரணமாய் இருக்கும்" என்று தன் பேச்சை முடித்து கொண்டார், அவ் ஆசிரியர்..


உளவியல் கூட கூறுகிறது, "குழந்தைகளுக்கு / பிள்ளைகளுக்கு முன் சண்டை பிடிக்காதீர்கள். அது அவர்களின், மன நிலையை பாதிக்கும்" என்பதாக..


ஆக, அவர்களுக்கு முன்னாலேயே சண்டை பிடிக்க கூடாது என்றால், அவர்களுடன் பிடிப்பது நியாயமோ!


எம் குழந்தைகளுக்கான ஊக்கம் எம் மீதே தங்கியுள்ளது.


இதனை புரிந்து நடக்க முயற்சி செய்வோம். இறைவன் எம்மை பொருந்தி கொள்ளட்டும்! என்ற பிரார்த்தனையோடு முடித்து கொள்கின்றேன்.


-ரஜா முஹம்மத்

Little Writer, Poet, Community Lecture of Pena Thulihal


Reviewed By: Community of Ezuththal Inaivoam


கருத்து தெரிவிக்க...

Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.