
பண்டாரவளை நகரப் பகுதியில் இன்று (09) முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது, முகக் கவசம் அணியாதோர் மற்றும் சுகாதார நடைமுறையினைப் பின்பற்றாத 30இற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத சிலரை பொலிஸார் தூக்கி சென்று வாகனத்தில் ஏற்றிய சம்பவமும் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அப்பகுதியில் சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் தொடர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக இவ்வாறு சந்தை மூடப்பட்டிருந்தாலும் இன்று காலை சில வியாபாரிகள் அத்துமீறி வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, பண்டாரவளை மாநகர சபை, பிரதேச செயலகச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் பண்டாரவளை பொலிஸார் இணைந்து அவர்களைத் திரும்பியனுப்பியுள்ளனர்.
வெல்லவாய, ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்த சில்லறை வியாபாரிகளே இவ்வாறு திருப்பி அனுப்பட்டனர்.



