'கர்ப்பிணிகளின் வயிற்றை கிழித்து, சிசுகளை பிடுங்கி பாறைகளில் அடித்தனர்!'

'கர்ப்பிணிகளின் வயிற்றை கிழித்து, சிசுகளை பிடுங்கி பாறைகளில் அடித்தனர்!'


மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டமையால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்கவுக்கு மன்னிப்பளித்தல் உள்ளிட்ட இன்னும் பல விவகாரங்கள் தொடர்பில், அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும், சரத் பொன்சேகாவுக்கும் இடையில் சபையில் கடுமையான வாய்ச்சண்டை ஏற்பட்டது.


பாராளுமன்றத்தில் இன்று (05) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு முன்னதாக உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர,


“இன்றைக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர், ஊடகங்களுக்கு கருத்துரைத்திருந்த சரத் பொன்சேகா எம்.பி, இனத்தையும் இராணுவத்தை மீண்டுமொரு த​டவை காட்டிக் கொடுத்துவிட்டார்” என்றார்.


மிருசுவில் படுகொலை வழக்கில் குற்றவாளியாக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்ற இராணுவ வீரருக்கு,​ மன்னிப்பு வழங்கியது முழுமையான தவறாகும், அதில், குற்றஞ்சாட்டப்பட்ட சகல படைவீரர்களும் சிறையில் அடைக்கப்பட வேண்டும். சிறையில் அடைக்கப்படாமை புதுமையானது என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார் எனக் கூறிய அவர், படுகொலையை யார் செய்திருந்தாலும் அதனை நாங்கள் கண்டிகின்றோம் என்றார்.


சரத் பொன்சேகா: பொய்ன்ட் ஒப் ஓடர்,


சரத் வீரசேகர: என்னா பொயின்ட் ஒப் ஓடர், பொயின்ட் ஒப் ஓடர் இல்லை: நிலையியற் கட்டளையின் பிரகாரம் கூறவும்.


சரத் பொன்சேகா: ”யுத்தம் செய்தோம், நானும் ஒரு படைவீரர் எனக்கூறி, அணிந்திருந்த சீருடையையும் கேவலப்படுத்த வேண்டாம். யாராக இருந்தாலும் மனித படுகொலைச் செய்யமுடியாது” என்றார்.


“மனித படுகொலை செய்திருந்தால், சுனில் ரத்னாயக்க மட்டுமல்ல, நீங்களும், கரணாகொடவும் யாராக இருந்தாலும், சிறைக்குச் செல்லவேண்டும், தூக்குமேடைக்கும் செல்லவேண்டும்.  அது இராணுவத்தை காட்டிக்கொடுக்கும் செயல் அல்ல: உனக்கு ஒன்றுமே விளக்கவில்லை” என்றார்.


சரத் வீரசேகர: “பொய் சொல்லி வீரராக வருவதற்கு முயற்சிக்க வேண்டாம், யுத்தக் குற்றம் செய்திருந்தால் சரி, ஆனால், செய்யாததைக் கூறுவதுதான் பிரச்சினையாகும், செய்யாததை கூறிதான், வீரராகுவதற்கு நீ முயற்சிக்கின்றாய்” என்றார்.


சபாநாயகர் மஹிந்த யாப்பா:   பொன்சேகா அவர்களே, அதற்கடுத்து நீங்கள்தான் உரையாற்ற வேண்டும். கொஞ்சம் அமருங்கள்,


சரத் வீரசேகர: “ஜெனீவா சூடு ஆரம்பிப்பதற்கு முன்னர், தமிழ் டயஸ் போராவுக்கு தேவையான வகையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேவையான வகையில், நாங்கள் யுத்தக் குற்றம் செய்தோமெனக் கூறிக்கொண்டிருக்கும் மேற்குலக நாடுகளுக்குத் தேவையான வகையில், எவ்விதமான சாட்சிகளும் இல்லாமல், “மரத்திலிருந்து திடீரென காய்” வரு​வதைப்போல இவ்வாறு கூறுவது, டொலருக்காக மட்டுமே” என்றார்.


அதனால்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில், ஒன்றரை கோடியும், ஐந்து இலட்சத்து 27 ஆயிரம் டொலரும் உங்களுடைய கணக்கில் இருந்தது.


சரத் பொன்சேகா:  “ஜெனீவாவுக்குள் புகுந்து, புகுந்து டொலர்களை தூக்கிக்கொண்டு நீங்கள் வந்ததற்கு,  அவ்வாறான கீழ்த்தரமான வேலையை நாங்கள் செய்யவில்லை”


சரத் வீரசேகர: “நீங்கள் மட்டும் யுத்தம் செய்யவில்லை, யுத்தத்தை வென்றெடுத்த ஐவரில் நானும் ஒருவன், அதனை நீ தெரிந்துகொள்”


இவரது முதலாவது காட்டிகொடுப்புதான் ”வெள்ளைக்கொடி”, வெள்ளைக் கொடியை தூக்கிக்கொண்டு வந்தவர்களை சுட்டுக்கொன்றதாக அமெரிக்காவில் வைத்து கூறினார்.


​​மகேஸ்வரன் என்ற புலி பயங்கரவாதி, சுனில் ரத்னாயக்கவுக்கு எதிரான வழக்கில் கூறுகின்றார்.


“என், கண்களை துணியால் கட்டினர், கம்பிவேலைக்கு அப்பால் தூக்கி வீசினர், அதில் கண் பட்டதால்  துணி அவிழ்ந்துவிட்டது. துணி தூக்கியெறிய பட்டதால் கண்ணுக்கு எவ்விதமான பாதிப்பும் ஏற்படவில்லை, அப்போதுதான் கழுத்தை அறுத்து, சுட்டுக்கொன்றதை கண்டேன் என, புலி பயங்கரவாதி கூறியதாக, கழுத்து வெட்டப்பட்டதையும் சரத்பொன்சேகா இங்கு கூறுகின்றார். அப்படியாயின், நீங்கள் பீல்ட் மார்ஷல் அல்ல, லான்ஸ் கோபுரலுக்கு கூட தகுதியில்லாதவர்.  


சரத் பொன்சேகா: “கழுத்து வெட்டியது தொடர்பில் உயர்நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டதையே, நான் இங்கு கூறினேன்” என்றார்.


சரத் வீரசேகர: “அப்படி சொன்னதுக்கு காரணம் என்ன? அப்படி சொன்னதுக்கு காரணம் என்ன?, தமிழ் டயஸ்போராவிடமிருந்து டொலர்களை பெற்றுக்கொண்டுதான் இவ்வாறு கூறுகின்றீர்கள்” என்றார்.


சுனிலுக்கு எவ்வாறு மன்னிப்பு கிடைத்தது, நீதிபதிகளில் தொழிநுட்ப விளக்கத்தால், கௌரவ சபாநாயகர் அவர்களே!, ஒரு குழுவால் செய்யப்பட்ட செயலில், 14 பேருக்கு மன்னிப்பளித்துவிட்டு, ஒருவருக்கு மட்டும் தண்டனை வழங்குவது அசாதாரணமானது என்பதே நீதிபதிகள் கண்டறிந்து கொண்டனர். அந்த தர்க்கத்தின் பிரகாரமே, மரண தண்டனையிலிருந்து சுனில் ரத்னாயக்க விடுதலைப் பெற்றார்.


கர்ப்பிணி தாய்களின் வயிற்றை கிழித்து, சிசுகளை அபகரித்து, பாறைகளில் அடித்த புலி பயங்கரவாதிகளை விடுதலைச் செய்தபோது அதனை எதிர்த்தீர்களா? இல்லை, 11 ஆயிரம் புலிகளை புனர்வாழ்வளித்து விடுவித்தபோது எதிர்த்தீர்களா? இல்லை, ஏன் எதிர்க்கவில்லை. சிறுவர் போராளிகள் 550 பேரை விடுதலைச் செய்தபோது எதிர்த்தீர்களா? இல்லை? ஏன்? எதிர்க்கவில்லை.


​அதற்கெல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத நீ, இராணுவ வீரனுக்கு இப்படி செய்வது, மிகவும் கேவலமானது.


சரத் பொன்சேகா: இவர் கூறுகின்றார், சரணடைந்த 11 ஆயிரம் பேரையும் படுகொலை செய்யுமாறு, இவ்வாறு முட்டாள்தனமான கதைகளை கூறுவதால்தான், உலகமே எங்களுக்கு எதிராக திரும்பியிருக்கிறது.


11ஆயிரம் பேரை புனர்வாழ்வளித்ததாக அரசாங்கமே ஆடம்பரமாக பேசுகிறது. இவர், (சரத் வீரசேகர) கூறுகின்றார், படுகொலைச் செய்திருக்கவேண்டும் என்று, இது எங்கிருந்து வந்த பைத்தியம்.


அதன்பின்னர், உரையாற்றிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா,


யுத்தக்களத்தில் ஒன்றாக இருந்தவர்கள் நாங்கள், ஆனால் சுனில் ரத்னாயக்க மனித படுகொலைகளைச் செய்தவர், ஆனால், அவ்வாறானவர்களை நாங்கள் பாதுகாக்கமாட்டோம்.


மனம்பேரி படுகொலைக்கு, கிருஷந்தி குமாரசாமி படுகொலை, எம்பிலிப்பிட்டிய படுகொலை உள்ளிட்டவற்றுக்கு தண்டனையை பெற்றுக்கொடுத்தோம்.


இங்கிருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், தானும் யுத்தம் செய்த மனிதனாம், சிவில் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்தார், பாதுகாப்பு சபையில் கூட இருக்கவில்லை, கடற்படையிலிருந்து வெளியே போட்டனர், என்னிடம் வந்து அழுதார், தொழில்தேடி தருமாறு அழுதார்.  


அதன்பின்னர், கோட்டாபய ராஜபக்ஷவிடம் கதைத்து, ​தொழிலை பெற்றுக்கொடுத்தேன், அதன்பின்னர், கடற்படைத் தளபதி, சாரதியைக் கொடுக்கவில்லை, பாதுகாப்பு வீரர்களைக் கொடுக்கவில்லை, என என்னிடம் வந்து மீண்டும் அழுதார், சாரதியையும் பாதுகாப்பு வீரர்களையும் இராணுவத்திலிருந்து நான்தான் கொடுத்தேன்.


அப்படி செய்த என்மீதே சேறு பூசுகின்றார்.


தமிழ் மக்கள் எனக்கு வாக்களித்தார்களாம். தமிழ் மக்களும் சிங்கள மக்களும் எனக்கு வாக்களித்தது ஏன்? ஜனாதிபதி ஒத்துழைத்தார், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஒத்துழைத்தார், நானும் அர்ப்பணித்தேன், யுத்தத்தை முடித்தோம். அதன்பின்னர், எனக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் போட்டி நிலவியது.


"தமிழ் மக்களுக்கு இடையூறு விளைவிக்கவில்லை, மனித உரிமைகளை பாதுகாத்தோம். ஆகையால்தான் தமிழர்கள், இராணுவத் தளபதிக்கு வாக்களித்தனர்" என்றார்.


“இராணுவத்தின் மீது, தமிழர்களுக்கு வைராக்கியம் இருக்கவில்லை” என்றும் சரத் பொன்சேகா பதிலளித்தார்.


உயர்நீதிமன்றத்துக்கும் மேலே இருக்கின்ற முட்டாள் நான் என்று சரத் வீரசேகர நினைத்தார் என்றால், என்னால் ஒன்றுமே செய்யமுடியாது எனக் கூறி தனதுரையை முடித்துக்கொண்டார்.


நன்றி - தமிழ் மிர்ரர்


Previous News Next News
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.