துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் கையெழுத்திட்ட சபாநாயகர்!

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் கையெழுத்திட்ட சபாநாயகர்!


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கையெழுத்திட்டுள்ளார்.


நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.


இதன்படி, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழுவை ஸ்தாபிக்கும் சட்டம் இன்று (27) முதல் வலுப்பெறுவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கடந்த 20 ஆம் திகதி வாக்கெடுப்பிற்கு விடப்பட்ட நிலையில், சட்டமூலம் மீதான மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு சட்டமூலத்திற்கு ஆதரவாக 149 வாக்குகளும், சட்டமூலத்திற்கு எதிராக 58 வாக்குகளும் பதிவாகின.


அதற்கமைய கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 91 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.