தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

தேங்காய் எண்ணெய் தொடர்பில் வெளியான அதிவிசேட வர்த்தமானி!

சமையல் தேவைக்காக பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய்யை வேறு எண்ணெய் வகையுடன் கலப்படம் செய்வதை தடுக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானியொன்று நுகர்வோர் அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் உடன் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போத்தல்களில், பொதிகளில் அல்லது கொள்கலன்களில் மொத்தமாக அல்லது சில்லறையாக விற்பனை செய்யப்படும் சமையல், உணவிற்கு பயன்படும் தேங்காய் எண்ணெய் ஆனது ஏனைய எந்தவொரு எண்ணெய் வகைகளின் அல்லது சேர்க்கையும் அற்றதாக காணப்பட வேண்டும் என இறக்குமதியாளர், உற்பத்தியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு குறித்த வர்த்தமானியில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க...

Previous Post Next Post
யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.